' யார் துணை '
சின்னஞ்சிறு பிள்ளைகளை
பள்ளி விட்டு செல்வார் ,
இளம் வயதில் மணமுடித்து
கட்டில் காணச் சொல்வார் ,
உடனிருந்து குழிபறித்து ,
உழைப்பை உறிஞ்சி கொள்வார் .
மாண்டுவிட்ட போது உடலை ,
மண்ணில் புதைத்து விடுவார் .
யாரிங்கு சொல்வார் .
ஊருக்கு உறுதுணையாய் ,
பலர் வாழ்ந்து செல்ல ,
பேருக்கு நான் துணையென ,
சிலர் வந்து சொல்வார் .
நூறுக்கு உரிமைகளை
தாரை வார்த்து செல்வார் .
Comments