' இயற்கையின் இழப்பு '
தவமாய் பெண்மை ,
தவழும் பிள்ளை ,
நீண்ட வானம் ,
நில்லா நேரம் ,
கரை வரும் அலை ,
கடவுள் சிலை ,
தடவும் தென்றல்,
தருகிற மரங்கள் ,
விடைபெறும் பகலில் ,
விடியும் இரவு ,
இரவின் மடியில் உறங்கும் நிலவு ,
பகலில் படரும் பகலவன் அழகு ,
உயர்மா மலைகளில் ,
உயிர்த்தெழும் காடு ,
அழுகிற மேகம் ,
வழிகிற அருவி ,
பறவைகள் பாடல் ,
இசைத்திட கருவி ,
மணங் கொண்ட மலர்கள் ,
வானவில் நிறங்கள் ,
தாயின் கருவில் அழகிய பிறப்பு ,
மண்ணுக்கு எருவாய் அழகிய இறப்பு ,
இயற்கைக்குள் அடங்கிய இத்தனை சிறப்பு ,
செயற்கைகுள் புகுந்து கண்டது இறப்பு .
தவழும் பிள்ளை ,
நீண்ட வானம் ,
நில்லா நேரம் ,
கரை வரும் அலை ,
கடவுள் சிலை ,
தருகிற மரங்கள் ,
விடைபெறும் பகலில் ,
விடியும் இரவு ,
இரவின் மடியில் உறங்கும் நிலவு ,
பகலில் படரும் பகலவன் அழகு ,
உயர்மா மலைகளில் ,
உயிர்த்தெழும் காடு ,
அழுகிற மேகம் ,
வழிகிற அருவி ,
பறவைகள் பாடல் ,
இசைத்திட கருவி ,
மணங் கொண்ட மலர்கள் ,
வானவில் நிறங்கள் ,
தாயின் கருவில் அழகிய பிறப்பு ,
மண்ணுக்கு எருவாய் அழகிய இறப்பு ,
இயற்கைக்குள் அடங்கிய இத்தனை சிறப்பு ,
செயற்கைகுள் புகுந்து கண்டது இறப்பு .
Comments