' பணக்கார பிச்சைக்காரர்களே '

இல்லாத செல்வமும் ,
பொல்லாத வறுமையும் ,
தாலாட்டுக் குழந்தையும் ,
தள்ளாடும் கிழவரும் ,
கையேந்தி வீதியில் ,
நாதியற்று நாளையில், 
பணத்தாசையால் பிணமாகும் மனமே .

கை கண் கால் இல்லாது ,
குழந்தை முன் செல்லாது ,
தாய் தந்தையென சொல்லாதோர் ,
தேடும் பாவம் அன்பிடமே ,
அது பிச்சை எடுத்தாலும் அழியாதே .

திரானியற்று திமிருடன் திரியும் ,
தலைகண தருக்கர்களும் ,
தலைவிதி தலைகுனிவு கண்டாலும், 
ஒப்பிட பிராணிக்கும் இணையாகாதோரே .

பகட்டுடனே பறக்கும் ,
பணக்காரர் களுக்கும் ,
பட்டறிவு பிறக்கும் ,
பாடம் சொல்லி கொடுக்கும் .

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

வேற்றுமையில் ஒற்றுமை

வேர்கடலை

முருகா

செம்மொழித் தமிழ்

நண்பகல்

மதுவே உயிரே