' கொடுமை '

அஞ்சுக்கு ஒன்னுடா
ஆயிசுக்கும் அடிமைடா

பொத்தான அழுத்திட்டு
பொத்திகிட்டு இருக்கோம்டா

ஒட்டு மொத்த வாழ்க்கையும்
ஓட்டப் போட்டழிஞ்சி போதுடா

பணப் போதை வந்துட்டா
பாதை மாத்திப் போதுடா

காணி நிலமிருக்குடா
ஏர் கலப்பை இல்லடா

மீத்தேன் ஹைட்ரோ கார்பனெல்லாம்
மண்ணுக்குள்ள இருக்குடா

மனுசன் உசுரு வாழ்க்கையும்
மண்டிடயிட்டு கெடக்குடா.

பச்சையாக பேசுறான் 
பதவியில இருக்குறான்

பச்சத்தமிழ் விவசாயி 
பட்டினியால் சாகுறான்

அங்கங்க நடக்குது
அடிவயித்த கலக்குது

தகப்பன்னு தப்பு பண்ணுறான்
தப்பிக்க பாக்குறான்

காவல்காறன் போர்வையில்
காம காவு கேக்குறான்

கல்வி கத்து குடுக்க சொன்னா
கலவி கத்து குடுக்குறான்

காதலிக்க மறுத்தாக்க
கத்தியில குத்துறான் .

Comments

Unknown said…
It's good ..specially last 4 couplets..

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

அவளன்பழகன்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

விடுதலை பறவை

சுனிதா வில்லியம்ஸ்