'வெல்லுமா மதி ஆயுளின் விதி' .
சக்தி உள்ளவனின்
புத்தி மழுங்குதடா
தத்தி தவழும் பிள்ளை
கத்தி கதறுதடா
அன்பு கொண்டவனை
நண்பு கொண்டவனை
பண்பு கொண்டவனை
துன்பு கொல்லுதடா
காலை கவலை கொண்டு
மாலை அவலை கண்டு
தோளில் சுமைகள் உண்டு
காலையின் கதிர்
ஞாலத்தின் சதிர்
நேரத்தின் எதிர்
எதிர் காலத்தின் புதிர்
நாளையின் கதி
கொல்லுமா சதி
வெல்லுமா மதி
ஆயுளின் விதி.
Comments