' தீமை தீண்டாமை '
தன்னகத்து அழுக்கை
தாங்கி தினம் சுமப்பவர்கள்
தீட்டும் மை தீண்டாமல்
தீண்டாமை சுமப்பது ஏன்.
மலைகளால் ஆறு பிறக்கிறது
மழையினால் பூமி சிரிக்கிறது
தீண்டாமை தீ சிந்தையை சிதைக்கிறது
மனிதத்தால் மானம் சிறக்கிறது.
வேற்றுமை என்றும் நிலைக்கிறது
ஒற்றுமை ஓர்நாள் மட்டும் பிறக்கிறது
கற்றதில் உற்றது எங்கே நடக்கிறது
மாசெனும் மற்றது
மண்ணில் மலடாய் கிடக்கிறது.
Comments