' கஜாவின் கால் தடம் '
இறைவனின் வரங்கள்
அந்த வேரூன்றிய மரங்கள்.
மெல்லிய கிளைகள்,
தாங்கின காய் கனிகள்.
நிலை கொள்ளா காற்று
உயிர் கொல்லி ஊற்று.
மழை வர காற்றும்
மண் வாசம் வீசும்,
இங்கு மழையுடன் காற்றில்
பல உயிர்கள் நாசம்.
பசியால் வாடும் பிஞ்சுகளின் தேகம்
எதிர்கால வாழ்வோ மாபெரும் சோகம்.
பசி போக்கும் உழவுக்கு
பழி சேர்த்தது பலர் இழவு.
காற்றின் பேருருவம் காட்டின
கால் நடைகளின் பேரரவம்.
முன்னேற்பாடே பெரும்பாடு
சேதங்களால் அங்கும் முரண்பாடு.
உலகம் தொடருது இயற்கையின் இழப்போடு
இயற்கையும் சமயம் கருதி துடிக்குது தவிப்போடு.
குடிநீரே பேரிடர்பாடு
இது இயற்கையின்
அவப் பேரெழுதிய குறிப்பேடு.
Comments