' அடங்க மறு '
அரை ஜான் பள்ளம் ஆயுதமாகையில்
ஆறடி படுகுழி தேவையில்லை.
நூறடி சாலை சொல்லும் வேகம் போல்
நொடிப் பொழுதினில்
வாக்கின் வேகத்தை
கோபம் போகுற போக்கில் கொட்டுதடா.
அடங்க மறுக்கும் அடங்காமை
விசைப் பலகினில் தன் விசை காட்டுதடா.
தசை நரம்பினில்
இரத்த சூடெரிய
வசை பாடிடும் பாடகர்
வாயப் பற்களை பேத்திட தோனுதடா.
Comments