' பாவாய் ஒரு பாவை '
கட்டு உடல் பெண்மை
காட்சிக்கு மென்மை
மொட்டு இதழ் பூவாய்
தொட்டவுடன் மலர
மொத்த உலகெல்லாம்
ஒத்த இதழ் சிரிப்பில்
மொழி பேசும் வார்த்தை
அவள் விழி பேசிச் செல்லும்
அவள் ஆசை அனைத்தும்
அவ் வளையோசை சொல்லும்
அவள் அழகை கூட்டும்
தாவணி அதை காட்டும்
கணமான மனமும்
மெல்லிதம் தந்து செல்லும்
குணமான பெண்மை
அவள் உள மென்மை சொல்லும்.
Comments