' புத்தகம்
உரையாடி மனம்வாடி துன்பமிகு உழலாம்
புறம் பேசு முலகில்
புற முதுகு மிடலாம்
புதிரான வாழ்வில்
பலர் சதுராடி விடலாம்
பணம் தேடும் பலரும்
படு குழியில் தடுமாறி விழலாம்
தடையோடு தவழ்ந்தோடி
நன்நடை போட முயன் றிடலாம்
தடுமாறும் பொழுதில் தவமாக திகழும்
பக்கங்கள் புரளும் பத்தகம் தேடி விடலாம்.
எழுத்தின் மா தவமாகி
எழு பிறப்புக் குறுதுணையாகி
எவர் எண்ணம் எது வானாலும்
அவர் எண்ணம் அவ்வழி மொழிந்து
புத் தகம் படைப்பது புத்தகமாகும்.
Comments