' கடற் கதிர் '
நீர் அலை சொல்லும்
பேர் அழகின் பின்
படர்ந்து சுடர் விடும்
பரிதி பேரொளி
பார்வை குளிரும்
இயற்கை இயன் மொழி.
ஒளி பிழம்பின் முன்
ஒலியால் பேரரவிடும்
ஆழிப் பேரலை
அசைந்தாடும் நீரூஞ்சல்.
நீரும் நெருப்பாய்
நினைத்து தன்னை
தானும் ஒளிதரும் பிம்பமாகி
நில்லா அலையின்
பொல்லாக் காதல்
சொல்லா வார்த்தையை
பேசும் ஓவியம்
தொலைந்து அருகும்
இயற்கையின் அருமை.
அது நிறைந்த அமைதி
இது செறிந்த நியதி.
Comments