' ராமா '
உந்தன் ஞாலம் அதை
நாளும் ஆளும் என் சீதா ப்ராண
பரந்தாமப் பிரபு ராமா.
தேடி தேடி உன்னை
நாடி வந்தோரை
ஆட வைப்பதுன் நாமா
ஆட்டி வைப்பதோ ரகு ராமா
வில்லெடுத்து நாண் தொடுத்தாய்
உன் சொல்லொன்றே என் உலகானாய்
பரம்பொருளே பரந்தாமா
பரதேசி நான் வணங்கும் நீ ஜெய ராமா
ஜெயராமா ரகுராமா பரந்தாமா பிரபு ராமா
வாழ்க்கை எனும் வினா அதிலே
கனாவினிலே உலா வருமே
நிலாவினைப் போல் சுகமளிக்கும்
இச்சகமதிலே இதமளிக்கும் என் சகி ராமா
சதி போக்கும் விதியாகி
மதி தருவாய்
அப்பொழுதே எப்பொழுதும்
என் கதி ராமா என்றாகிடுவாய்.
ரம்யா முக நாத
ராகாஸ்வர கீதா
Comments