' பாரதி '
மண்ணோடு மனிதத்தை
மடியாமல் காத்தவன்
உலகோடு உடலுக்கும்
உயிர் தந்து வாழ்ந்தவன்
விடியாத இருளோடு
விடுதலை கண்டவன்
அடி பணியாத வாழ்க்கையில்
பேராண்மை கொண்டவன்
பொண்ணோடு பொருளை
பொருட்டாய் மதிக்காதவன்
தலை குனியாமல் தன்னோடு
தன்மானம் கொண்டவன்
எண்ணத்தில் எவ்வுயிரும்
தன்னுயிராய் எண்ணினான்
தலைமுறைகள் தலை நிமிர
தடையோடுப் போராடினான்
மொழியோடு விளையாடி
கலையாகி கவியாகினான்
அழியாத புகழுக்கும் அவன்
அடையாளம் ஆகினான்
மண்ணோடு பெண்ணுக்கும்
விடுதலை வேண்டினான்
கல்லாமை இருள் போக்கும்
கல்வியை தேடினான்
பிரசவத்தில் பிறந்தவன்
பிரசுரத்தில் சிறந்தவன்
உணர்வோடு சொல்கிறான்
உறவோடு பார்க்கிறான்
உலகாகி நிற்கிறான்
உயிரோடு வாழ்கிறான்
மதங்களை கடந்தவன்
மனிதத்தில் உயர்ந்தவன்
தேசியம் காத்தவன்
தேடல் பல உடையவன்
இல்லா இறைவனை
ஒன்று என்று அறிந்தவன்
பரவிய இயற்கையை
பரம் பொருளென்று உணர்ந்தவன்
தேந்தமிழ் சொல்லெடுத்து
பைந்தமிழ் பாட்டு தந்தான்
ஐ விரலங்கிருக்க
மையுடன் போர் தொடுக்க
காதலும் கனிந்துருக
காலனின் கணம் நெருங்க
அடிமை குணம் வேறருத்து
அடையாள உருவெடுத்தான்
கண்டு நொந்த கணம்
நொந்து உடைந்த மனம்
கிளர்ந்து எழும்பும் குணம்
தளர்ந்து வீழும் வரை
தளராத ரௌத்திரம்
பன்மொழியில் புலமை கொண்டான்
தமிழிலே தவமும் கண்டான்
அழகது இயற்கை என்றான்
அவளிடம் காதல் கொண்டான்
பாரதி சொல்லா பாரதியை - அவன்
பா ரதம் வந்து சொல்கிறது.
Comments