' ஊடல் '
சத்தமிட்ட உதடு மெல்ல
முத்தமிட சொல்லும்
முத்ததின் எச்சல்
முக்தி தந்து செல்லும்
இடை வளைக்குங்கை
வளை கை விரல்களை கோர்க்க
விழி பார்த்த காதல்
வசை பாடும் மனதில்
வழிந்தோடி கொல்லும்
பாய்ந்தோடும் இரத்தம்
பயந்தோடி, சப்த நாடியிலும் கத்தும்
போர் செய்யும் உடலில்
புயல் காற்றும் வீசும்
பகலவக் கதிரில்
பனி குளிரை வீசும்
சிற்றின்ப சுக மொழியாய்
பேரின்பம் பேசும்.
Comments