' தோனி '
காற்றுக்கும் வேகம் தனை அவன்
கற்றுத் தருவான்
நிறம் மாறும் வானவில்லை விட
நிலையாய் வாழும் தலையாய் இருப்பான்
ஓயாத கடலுக்கும்
ஒரு நொடிப் பொழுதின்
உழைப்பை சொல்லித் தருவான்
சுமை தாங்கும் பூமிக்கும்
பொறுத்துப் பழகப் பாடம் எடுப்பான்
இகழாமல் பகையின் தீயில்
தீயே உணரும் நெருப்பின்
மதிப்பாய் இருப்பான்
மூவண்ணக் கொடியில் படர்ந்த
புகழில் இவனும் ஓர் நொடியேனும் பறப்பான்
இறவின் விழியாம் நிலவை விட
இவன் கனிவாய் ஒளிர்வான்
கன்றில் துளிரும் செடி கொடிகட்கும்
என்றும் பசுமை என்றே வாழ்வான்.
எப்போதும் எப்புகழும் அக்கணமே என்றெண்ணி
அப்பொழுதை வாழ்ந்திடவே எப்பொழுதும் வாழ்ந்திடுவான்
Comments