' சுதந்திரத்தின் சரித்திரம் '
அடிபணிந்த வாழ்க்கையில்
துணிந்து எழுந்திட
காரணம் ஆனவர் யார்
ஞானம் பெற்றவர்கள்
மானம் அற்று தினம்
மாண்டனர் பல கோடி
வேசம் இட்டவர்கள்
தேசம் ஈட்ட பல
திட்டம் தீட்டினரோ
வஞ்சனை நஞ்சினில்
நாசனர் ஆதிக்கம்
நாட்டினை பாதிக்கவே
சரித்திரம் சொல்லும்
சுதந்திரம் வந்தது
தரித்திரர் தலை கொய்ய
அணி திரள் கூட்டம்
அனைவரின் நாட்டம்
அடைந்திடும் விடுதலையில்
ஏட்டினில் ஏற்றம்
பெற்ற நம் எழுத்துகள்
நாட்டினில் நிலை பெறவே
இடு காட்டினில் இட்டு
அந்நிய ஆட்சிக்கு
ஈமச் சடங்குகள் செய்து விட்டோம்.
Comments