' மீண்டும் ஆட்சி செய்ய, மீளும் முயற்சி செய்தால் '
அச்சடித்த புத்தகம் காட்டுகின்ற தத்துவம்
அடிமைத்தனம் என்கிற ஆங்கிலேய மகத்துவம்
தேடி கற்கும் நாமெல்லாம்
பணத்தை தேடி ஓடவே
நாடி கூட நடிக்குதே
நம்மை கொல்ல துடிக்குதே.
பட்ட படிப்பு படிச்ச நாம
பட்டினியை படிச்சதில்ல
பரம்பரையை அறிந்ததில்ல
பயிலும் தாய் மொழிய மதிப்பதில்ல.
பணத்தை தேட பயிலும் கல்வி
மதி கொண்ட, மனித மனதை,
மறந்தும் படிக்க மறுப்பதேன்
தெரிந்தம் வெறுமையாக இருப்பதேன்.
பெற்றோரின் மனம் படிக்க
கற்று தருவதிந்த கல்வியா
ஊனமுற்றோரின் உளம் படிக்க
கற்று தருவதிந்த கல்வியா.
அழகிய நம் மொழி அர்த்தங்களை
அகராதிக்கு அடக்கிய பின்
ஆளும் அவன் மொழி நமக்கெதற்கு
மீண்டும் நம்மொழி ஆட்சி செய்ய
மீளும் நம்மொழி முயற்சி செய்தால்.
Comments