' நன்தமிழ்(நம்தமிழ்) '
அன்பை அழகாய் அளித்த மொழி
ரௌத்திரம் கற்கச் சொன்ன மொழி
ரதமாய் பாவில் வந்த மொழி
இதமாய் இனிமைகள் தந்த மொழி
இதயம் துடிக்கச் சொல்லும் மொழி
ழ கரச் சிறப்பு கொண்ட மொழி
உணர்வில் ஒளிந்து உயிர்த்த மொழி
ஈரடி ஏழு வாக்கியத்துள்
வள்ளுவ வள்ளல் வார்த்த மொழி
இன்டு இடுக்குகள் எல்லாமும்
இலக்கணமாக இனித்த மொழி
உயிரும் மெய்யும் உயிர் மெய்யுமாய்
சிந்தையும் செயலும் சேர்ந்ததுவாய்
எலும்புக் குருதி தசையாக
இறைவன் தந்த வரமாக
வாழ்வில் வந்த வளமாக
வளர்ந்து நிற்பது தமிழ் மொழியே.
Comments