தாய்

குழந்தையின் சத்தத்தில் 
இழப்புகள் பெரிதல்ல
இனிமை இது என்றும் 
தனிமைக்கு துணையென்று 

தாய் அவள் அவாவுடன் 
அவ்வுயிர் காத்திட 
தன்னுயிர் தந்திடுவாள் 
தான் அதில் பேரின்பம் கண்டிடுவாள். 

பேறு காலத்தில் 
வேறு நினைவின்றி 
மகனோ மகளோ என்றெண்ணி 
பெயர் தேடி திரிந்தாலும்
பித்தாகி அலைந்திடுவாள்
வித்தாக விதைத்த தெல்லாம்
விரைவாக பசியாற
தொப்புள் வழி உறவாலே
தொட்டு முத்தமிட்டு விட
கனத்த பத்து மாத வலி
கணப் பொழுதில் கண்மறைய 
தனக்கென வாழாதவளும் 
தனது எனும் பொருளுணர்வாள்
அருந்தவத்தின் ஆதியினை 
கரும்பலகையில்லா அக் கருவறையில்
கணிவாக கற்பிப்பாள்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

மனைவி

அவளன்பழகன்

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

விடுதலை பறவை

சுனிதா வில்லியம்ஸ்