அப்பா

அன்னைக்கு அவன் துணையாம்
என்றைக்கும் எனக்கு உறுதுணையாம்
பள்ளி சொல்லும் பாடமாம்
பல்கலைக்  கழகமே இவராகுமாம். 

தளரா உளமடைந்து
தரணியே இவனாகலாம்
பல தடைதாண்டு மிவர் புகழுக்கு 
பரணியே நாம் பாடலாம். 

அறிவே அறமென்றாகிட
இவர் உறவே பெரும் வரமாகிடும்

இவன் அறவே அழிவற்றவன்
உறவினில் இவன் உற்றவன். 

தனக்காய் ஆசையற்றவன்
பொருளுக்கும், பொருளுக்கும் பிறழா பொருளானவன்

கானக் குழலில் காற்றானவன்
இயற்கை எழிலில் அன்பூற்றானவன்
ஆண்மை கடந்து ஆணானவன்
தன் பெண்ணுக்கும் பொருட்டானவன். 

அறியா மக்கட்கு இருளானவன்
பலர் உயர தானும் 
மெழுகாய் உருகிக் கரைவானிவன்
கரு சுமப்பின் கருவானவன்
அவன் சிறப்பை இங்கே அறிவானெவன். 

Comments

Anonymous said…
மிக நன்று

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை