அம்மா
வருவானோ/ளோ மாட்டானோ/ளோ
என்றெண்ணி வாடிடுவாள்
வந்தவுடன் வசைபாடி
அன்பினால் அதட்டிடுவாள்.
இரு கை கொண்டு அணைத்திடுவாள்
மன இருக்கையில் நமை அமர்த்திடுவாள்
மனக்குறை பல இருந்தாலும்
மலர் மல்லிகையென மலர்ந்திடுவாள்.
கரு சுமப்பதை சுகமென்பாள்
பளு சுமக்கையில் கை வலியென்பாள்
மகள் செல்வது மறுவீடென்பாள்
மறு கணத்தே மன வலி கொள்வாள்.
தன் கடைசி காலங்களில்
கை விடுவான்/ள் என் றறிந்தாலும்
கை கொடுத்தே உதவிடுவாள்
தன் கை ரேகை தேயும் வரை.
ரேகை அழிந்திடினும்
வாகை சூடிடினும்
ஆயுள் பொய் யுரைப்பதில்லை
அது அன்னை தந்ததென.
Comments