வான் சிரிப்பு
வானின், எல்லை கானல் நீரும்
அதனுள் பார்க்கப் பல நூறும்
வரையறை இல்லா வானில்
வழியடைத்து மேகம் மெல்ல ஊரும் .
நாமும் விண்ணில் வாழ்கிறோம்
புவி ஈர்ப்பால் தரையை ஒட்டி தாழ்கிறோம்
ஆயிரம் கண்ணுடைய வானம்
அதன் பார்வையில் புள்ளியாம் நீயும் நானும்.
சிதறிய நிலத் துண்டுகளாம்
வேற்றுமையே இதன் வேண்டுதலாம்
சுதந்திர வானும் காணும் வேடிக்கையாம்
இதில் நடக்கும் அரசாட்சியே பெரும் கேளிக்கையாம்.
என்றும் ஏளனத்துடனே சிரிக்கிறது
நிலவும் ஏற்ற தாழ்வுகள் தாங்காமல்
தானும் மழையாய் கண்ணீர் வடிக்கிறது
மானுடத்திற்கு மாபெரும் அறிவுரை அளிக்கிறது.
Comments