கொடிய கொரோனா
அன்பு அழிந்திடுமோ
மனிதம் மடிந்திடுமோ
உழைப்பு உடைந்திடுமோ
கனவு கலைந்திடுமோ
குடும்பம் குலைந்திடுமோ
கல்வி கரைந்திடுமோ
காலம் கழிந்திடுமோ
ஞாலம் பிழைத்திடுமோ
கவலை வந்து நமை
வாட்டி வதைத்திடுமோ
கூலி வேலையும்
கேலி செய்திடுமோ
வாழ வழியுமின்றி
வலிகள் பெருகிடுமோ
தேடல் என்பது தேங்கி கிடக்கையில்
நடக்க இடமுமில்லை
முடங்கி முடியவில்லை
காலங் காத்திருந்து
மரமாய் மலர்ந்துவிடு
ஏற்ற தாழ்வுமில்லை
ஏக்கம் தேவையில்லை
தாக்கம் என்பதை
தூக்கி எரிகையில்
வாழ்வை சீரழிக்க வந்த கொரானா
ஊக்கம் உள்ளவரை
நோக்கம் வெல்லும் வரை
நின்று பார்ப்பானா கொடிய கொரானா.
Comments