நானும் என் புத்தகமும்
தொட்டு படித்தால் கொட்டி கொடுக்கும்
அறிவும் இதனை அள்ளிப் பருகும்
தெளிவை கொடுத்தால் சிந்தை சிறக்கும்
தெரியா ததற்கும் விளக்கமளிக்கும்.
எழுத் தறிவித்தல் இறைவனாகும்
எடுத் துறைக்கும் புத்தகம், புத் தகமூட்டும்
கேடு செய்பவன் ஏடு தொட்டால்
நாட்டில் நல்லறம் நிலைத்தே நிற்கும்.
புத்தகம் வெற்றுப் பக்கங்களல்ல
புத்தியின் யுத்தச் சித்தங்களே
வித்தகர் விரல்களால் விதி செய்ய
மத்தவர் அறிந்திட உரைத்திடும் புத்தகமே.
பக்கம் புரள்வதில் புதிர்கள் இருந்தாலும்
படிப்பவன் சதிரை சிதறி யடித்துவிடும்
தான் கற்றது கை மண் அளவே ஆனாலும்
எடுத்துரைத்தால் அறியா மையெனும் இருளகலும்.
அறத்தின் விரிவே அறிவாகி அதை
அறவே அறியப் புத்தகம் துணையாகும்
உரியப் புத்தகம் தேடி படித்தாலே
வாழ்க்கை உந்தன் வசமாகும்.
Comments