காலை
கதிர்கள் எழவில்லை
இருளும் இங்கில்லை
இரவின் பிரிவாலே
விடியல் விடை சொல்லுதே.
வளியும் வலியின்றி
வயல்வெளியில் விளையாட
வியர்வை வடிந்தோடும்
அழகு காலை இதே.
பகலவன் படுக்கைதனில்
மதியுறங்க பார்க்கையிலே
சூரியக் கதிர் சூட்டில்
சுவடுகளும் மறைகிறதே.
ஊமையன் பேச்சை போல்
ஊர் பேச்சும் மெல்லெழவே
ஊர் சுற்றும் சூரியனும்
கண் விழிப்பான் கதிர் தந்தே.
குளுமையான காற்றும்
பறவைகளின் பாட்டும்
குதூகலம் ஊட்டும்
இது இனிய காலைப் பொழுதின் இன்பத் தேரோட்டம்.
Comments