பசியின் பேருரு
சொல்லவும் முடியாது
சொல்லில் அடங்காது
அமரர் ஆகும் வரை
அடக்கவும் முடியாது.
நாம் உயிர் வாழ்ந்திட
நாளும் உழைத்திடும்
உடலுள் இருந்து
உலகில் உலா வரும்.
பிறந்து பலரை இறக்க வைக்கும்
தன்னையும் வதைத்து, வாழ் வளிக்கும்
தின்பதே இதற்கு தீர்வாகும்
உணவே இதற்கு உறவாகும்.
பல பொருள் தேடும் நமக்கெல்லாம்
உடலின் உறவாகிப் பரம் பொருளாகும்
ஓர் நாளில் பல முறை, பல, பிறப்பெடுக்கும்
உயிர் வாழ பசியாய் பேர் உருவெடுக்கும்.
Comments