தீக்கிரை
பகைமை தவிற்ப்போம்
பழித்தல் மறப்போம்
அறிவை வளர்ப்போம்
அன்பை அளிப்போம்.
உறவை நினைப்போம்
வெறுப்பை அறுப்போம்
வலிகள் கடப்போம்
வழிகள் படைப்போம்.
இனிமேல் விழிப்போம்
இடர்கள் ஒழிப்போம்
இழவு தடுப்போம்
இமயம் பிடிப்போம்.
தேகம் தாகத்தால் தவித்துவிட
தீயும் தீமை செய்துவிட
தீபத் திரிகளும் அழுகிறது
அவளை எண்ணி வேதனை அடைகிறது.
பகைத் தீயில் தன்னை இறையாக்கி
தொடர் கதைக்கு தன்னை முடிவாக்கினால்.
Comments