கோமாளி
காதுகளில் விழியாகி,
கைதட்டல் விலையாகி,
கேளிக்கை கலையாகி,
வாழ்க்கை இது என்றாக்கி,
சைகைகள் மொழியாகி,
மேடையை தாய் மடியாக்கி,
சேட்டையை கைத்தடியாக்கி,
தருவான் மகிழ்ச்சியை மருந்தாக்கி.
ஊராரும் சிரித்திடுவார்
உன் செயலை ரசித்திடுவார்
உன் மனதை யாரறிந்திடுவார்
உன்னை அறிந்த நீயோ அழுகையில் சிரிப்பாவாய்.
வெளியே அலங்கோலம்
உள்ளே பல காயம்
கேளிக்கைக்காய் தன்னை
வேடிக்கை ஆக்கிடுவாய்.
Comments