என்னவள்
என் காதலும் அவள் தான்
என் காலமும் அவள் தான்
மை தரும் வார்த்தையும் அவள் தான்
வார்த்தை தந்த வாழ்க்கையும் அவள் தான்
இசை ராகமும் அவள் தான்
இசை தரும் கவியும் அவள் தான்
இரவும் அவள் தான்
இரவின் எழில் நிலவும் அவள் தான்
நிலவின் வெந்நிறமும் அவள் தான்
வெண் பால் மனமும் அவள் தான்
மனதில் அன்பானவள் அவள் தான்
அன்பின் பேராற்றலும் அவள் தான்
பேராற்றலின் மாற்றமும் அவள் தான்
மாற்றம் போல் மாறா நிலை அவள் தான்
எந்நிலையிலும் எனக்கானவள் தான் என்னை முழுதும் அறியாதவள் தான்
அவளறியா வகை காதலுடையவன்
அவளறியவே இதை புனைபவன்
அவளுக்கு இது புரிந்து விட்டால்
அவளின் அவன் தானிவன்
அவளை காண தவமிருப்பவன்
Comments