செருப்பு
காயத்தை காத்து
காயத்தை நீக்கி
காலோடு வாழும்
கீழோடு நாளும்.
தேய்ந்து மெலிந்திடும்
கிழிந்து அழிந்திடும்
காலில் கலந்திட
கால்கள் அலைந்திடும்.
பாதம் பட்டதும்
பாதை காட்டிடும்
பாவப் பட்டதும்
பலருக்கு வாழ்வளித்திடும்.
முள்ளையும் கல்லையும்
முட்டி மோதிடும்
ஆளையும் காலையும்
தன் தலையில் தாங்கிடும்.
காலின் உடுப்பு
நா, வாய் இதன் உறுப்பு
காலுக்காய் ஓர் படைப்பு
இத்தனை சிறப்புக்குறியது செருப்பு.
Comments