குழந்தை சிறு குறிப்பு
பாலின பேதம் பிறப்பில்
பெறயியலா தாய்மை தவிப்பில்
வழியறியா பலர் கரு கலைப்பில்
வறுமையால் சிலர் விடுவார் அவன்
வளர்ப்பில்.
பால் பருகிட பசியால் துடித்திடும்
மதியின் சதியில் விதியென விலகிடும்
இத்தனை தடை தாண்டும் குழந்தை
தாயின் புன்னகையில் விடையாகிடும்.
வெற்றிக் கொடியுடன் பிறந்திடும்
அது தொப்புள் கொடி என்றாகிடும்
பிஞ்சுக் குழந்தையின் உணர்வுகள்
அழகுடைய அழுகை சிரிப்புமாகிடும்.
நடைவண்டி பிடித்து நடக்கும்
முன்னே தானாகப் புரண்டு படுக்கும்
பல் முளைக்க விரலை கடிக்கும்
சொல் பிறக்க மழலை வரும்
அழகுக் குழந்தை தரும் இன்ப வரம்.
Comments