இரவு
மதியெனும் பெண்ணோ காத்திருக்க
மாலையும் இரவினை அலங்கரிக்க
மணமகனாய் காரிருள் அவதரிக்க
அவன் மனதின் மையலில் நிலவிருக்கும்.
உறங்க உறவு மாகிருக்க
விழித்தோர்கு ஒளித்து மகிழ்த்த காத்திருக்க
பெருந்திரையில் பிறை வடிவாயிருக்க
காரிருள் கணவனில் ஓர் நாள் கலந்திருக்கும்.
பால்வெளி முன்னே விழி காணும்
பெரு நட்சத்திரப் படை யுடையோனாய்
விண்ணான நீ மண்ணுடன் விளையாட
நிலவின் விழி தரும் ஒளியே வழியாகும்.
இரவின் கையில் குழலிருந்தால்
இந்த காற்றும் கான மாகிவிடும்
மன பாரம் பெரிதே ஆனாலும்
இவ்வெழில் முன் எதுவும் நிலைக்காது.
Comments