Posts

Showing posts from November, 2020

வேல்முருகா

சக்தி வேலா  முருகா வடிவேலா கடைக்கண் பார்வையிலே காத்தருளும் கதிர் வேலா மலை மகள் வாசா நீ மருத மலை வாசா தவ தீன சிவா நீ தந்த சரவண பவா பால தண்டா யுதபாணி  நீ எங்களை காக்கும் இறைவா நீ முக்தி தரும் சக்தி சுதனே அவன் குறைகளை போக்கும் குகனே சக்தியமானவனே சன்முகனே செருகளத்தூ ரமைந்து சர்வசித்தி தருபவனே சுப்ரமண்யனே ஆறறிவை சிறக்க செய்யும் ஆறுமுகா சரணாகதிக்கு என்றும் நீயே வேல்முருகா சர்வலோக நாயகனே  சஷ்டியில் பிறந்தவனே

மழை

வாய் விரிந்த குடத்திற்க்கும்  பசுமையால் பாய் விரித்த நிலத்திற்கும் விரிந்தோடும் ஆற்றுக்கும்  விருந்தாகிட வீட்டுக்கும் , அடங்காத தாகத்துக்கும்  அடக்கும் நீர் தேக்கத்துக்கும் குளித்திடும் தேகத்துக்கும்  குதித்திடும் அருவிகளுக்கும்  அடர் காட்டின் மனு ஏற்று கடல் நீரின் தவமாகி கருமேக பூட்டிற்கு குளிர் காற்று சாவியிட மனிதனாய் மண் பிறந்து விண் போக புனிதமாய் வாண் பிறந்து மண் விழும் வான் மேக வரம் மழையோ மழை வரா சூழலுக்கு  மரம் நடா மனித கரமே மாபெரும் பிழையோ.

கண்ணீர் க/கவி தை

சிறகடிக்கும் இமைக்குள்ளே சிறைபட்ட விழியாகி வழிந்தோடும் கண்ணீரே வரலாற்றின் வழித்தடமாய்.  கார் மேகம் கூட்டம் கண்டு வண்ண மயில் ஆடிடலாம் வான்மழையும் தூவிடலாம் அதில் கண் மழையை மறைத்திடலாம் மழைக்கு ஒதுங்கிப், பதுங்கிய ஓட்டை கீற்றாக  கண்ணீர் விடுவது கொஞ்ச நேரம் தான் அதன் காரணம் காலம் முழுவதும் வாழுவதால் லட்சிய கனவுகள் காணல் நீராக தடைபட உள்ளம் உடைந்திடும் நூறாக அமையட்டும் நாளை என்பது  இக் கண்ணீர் கதைக்கு மாற்றாக. 

கவிதை

ரசித்து எழுதும் வரிகள்  வார்த்தை பசிக்கு உணவு  துடித்து எழுதும் வரிகள்  தவிக்கும் இதய விளைவு . சில மணித்துளி தான் செலவு அறிவை சிந்தனையாக்கிடும் உறவு அதில் எத்தனை கருத்துகள் வரவு  சில தந்திடும் மாபெரும் பிளவு . அழகூட்டும் கற்பனையிடம் பல களவு அது அறிவாற்றல் காட்டும் செறிவு காலப் புரட்சிகள் போற்றிய துணிவு  காதல் கவிகளில் எத்தனை கணிவு . கவிதை ஒரு மடந்தை  நான் விளையாடிடும் சிறு குழந்தை . நான் கவிதையின் வளர்ப்பு  அதுதான் எனக்கு உயிர்ப்பு. 

கடவுளின் சுயநலம்

வேண்டும் வரம் வழங்கிடவே பல வேதனைகள் தந்திடுவான்  சாதனைக்கு வழி விடுவான்  சோதனையெனும் தடை தருவான்  பாதைகளை காட்டிடுவான்  படு குழிகளதில் படைத்திடுவான் எதிர் பாரா நேரத்தில்  எல்லாமும் தந்திடுவான்  இறப்பதற் கென்றே  பிறப்பை படைப்பான் அழுதிடு வதற்கென சிரித்திட வைப்பான். நன்நிலை தாழ்ந்தே  நடுத் தெரு வாழுவார் அவர் நடத்திக் கொடு என  அவன் முன் கை கூப்பிடுவார். கடவுளும் சுயநல வாதியடா மனிதன் நினைத்தது நடந்தால் நம்மை மறந்திடுவானோ என்னும் எண்ணம் கொள்வோனடா. 

சிவனே

சடை விரித்து ஆடும்  அந்த சதா சிவனை நாடி இருகாலும் கடந்து ஓடும்  காலம் முழுதும் அவனை தேடி. வாழும் நொடிகள் கூட நினைக்க மறக்க கூடும் அழைக்க ஓடி வருவாய்  உழைத்து பிழைக்க கோடி தருவாய். நெற்றி சாம்பல் கூட  உன்னை பற்றி எடுத்து சொல்லும் பற்று அற்றவனின் பற்று நீ என்றாகக் கூடும். உடுக்கை ஓசை என்னை உன்னை காண கூட்டிப் போகும் ஒரு வேளை படுத்த படுக்கையானால் மறு வேளை உன் பாதம் பணிய வைப்பாய். முந்தி வணங்க உன்னை  முதலில் நந்தி வணங்கி வந்தேன் எந்தை இருக்கும் பொழுதே  நின்னை தந்தை என் றுணர்ந்தேன். நான் புத்தியற்ற பிள்ளை சில நேரம் தத்தி தாவும் பொழுது கத்தி கதறி விடுவேன்  கை கொடுத்து உதவ வருவாய். ஐந்து கரத்தோனும்  ஆறு முகத்தோனும் அழகு மீனாட்சியும் ஐயாரப்பரோடு சேர்ந்து  அழகிய காட்சி தந்து செல்ல வேண்டும்.