சிவனே
சடை விரித்து ஆடும்
அந்த சதா சிவனை நாடி
இருகாலும் கடந்து ஓடும்
காலம் முழுதும் அவனை தேடி.
வாழும் நொடிகள் கூட
நினைக்க மறக்க கூடும்
அழைக்க ஓடி வருவாய்
உழைத்து பிழைக்க கோடி தருவாய்.
நெற்றி சாம்பல் கூட
உன்னை பற்றி எடுத்து சொல்லும்
பற்று அற்றவனின் பற்று
நீ என்றாகக் கூடும்.
உடுக்கை ஓசை என்னை
உன்னை காண கூட்டிப் போகும்
ஒரு வேளை படுத்த படுக்கையானால்
மறு வேளை உன் பாதம் பணிய வைப்பாய்.
முந்தி வணங்க உன்னை
முதலில் நந்தி வணங்கி வந்தேன்
எந்தை இருக்கும் பொழுதே
நின்னை தந்தை என் றுணர்ந்தேன்.
நான் புத்தியற்ற பிள்ளை
சில நேரம் தத்தி தாவும் பொழுது
கத்தி கதறி விடுவேன்
கை கொடுத்து உதவ வருவாய்.
ஐந்து கரத்தோனும்
ஆறு முகத்தோனும்
அழகு மீனாட்சியும்
ஐயாரப்பரோடு சேர்ந்து
அழகிய காட்சி தந்து செல்ல வேண்டும்.
Comments