மழை
வாய் விரிந்த குடத்திற்க்கும்
பசுமையால் பாய் விரித்த நிலத்திற்கும்
விரிந்தோடும் ஆற்றுக்கும்
விருந்தாகிட வீட்டுக்கும் ,
அடங்காத தாகத்துக்கும்
அடக்கும் நீர் தேக்கத்துக்கும்
குளித்திடும் தேகத்துக்கும்
குதித்திடும் அருவிகளுக்கும்
அடர் காட்டின் மனு ஏற்று
கடல் நீரின் தவமாகி
கருமேக பூட்டிற்கு
குளிர் காற்று சாவியிட
மனிதனாய் மண் பிறந்து விண் போக
புனிதமாய் வாண் பிறந்து மண் விழும்
வான் மேக வரம் மழையோ
மழை வரா சூழலுக்கு
மரம் நடா மனித கரமே மாபெரும் பிழையோ.
Comments