கடவுளின் சுயநலம்
வேண்டும் வரம் வழங்கிடவே
பல வேதனைகள் தந்திடுவான்
சாதனைக்கு வழி விடுவான்
சோதனையெனும் தடை தருவான்
பாதைகளை காட்டிடுவான்
படு குழிகளதில் படைத்திடுவான்
எதிர் பாரா நேரத்தில்
எல்லாமும் தந்திடுவான்
இறப்பதற் கென்றே
பிறப்பை படைப்பான்
அழுதிடு வதற்கென
சிரித்திட வைப்பான்.
நன்நிலை தாழ்ந்தே
நடுத் தெரு வாழுவார்
அவர் நடத்திக் கொடு என
அவன் முன் கை கூப்பிடுவார்.
கடவுளும் சுயநல வாதியடா
மனிதன் நினைத்தது நடந்தால்
நம்மை மறந்திடுவானோ
என்னும் எண்ணம் கொள்வோனடா.
Comments
அவன் அருளால் அவன்தாள் வணங்கி.....