கவிதை
ரசித்து எழுதும் வரிகள்
வார்த்தை பசிக்கு உணவு
துடித்து எழுதும் வரிகள்
தவிக்கும் இதய விளைவு .
சில மணித்துளி தான் செலவு
அறிவை சிந்தனையாக்கிடும் உறவு
அதில் எத்தனை கருத்துகள் வரவு
சில தந்திடும் மாபெரும் பிளவு .
அழகூட்டும் கற்பனையிடம் பல களவு
அது அறிவாற்றல் காட்டும் செறிவு
காலப் புரட்சிகள் போற்றிய துணிவு
காதல் கவிகளில் எத்தனை கணிவு .
கவிதை ஒரு மடந்தை
நான் விளையாடிடும் சிறு குழந்தை .
நான் கவிதையின் வளர்ப்பு
அதுதான் எனக்கு உயிர்ப்பு.
Comments