என் பெயர் இரா. கௌசிக்ராமன் (ஒளிரும் மழைத்துளி கவிதை நூல் ஆசிரியர்).
உங்கள் கருத்துகளை WHATS app ல் கூறவும் & புத்தகம் பெறவும் (6380461376).
இத்தளத்திலுள்ள படைப்புகள், சமூக கண்ணோட்டத்தை மையமாக கொண்டு அமையப் பெற்றதாகும்.
அறம் செய்திடவே தரம் தாழ்ந்திடுவோம் தற்புகழ் மறந்தே தானஞ் செய்திடுவோம் கரம் கொடுத்தே நாமுதவிடுவோம் சினங்கடந்தே சில தொண்டுகள் செய்வோம் மனமுடைந்தோர் மறு வாழ்வு பெற ஆறுதலை நல் வாக்கு செய்யும் வழி மாறித் தடம் மாறுகையில் கல்வியால் நல்வழி காட்டிடுவோம் கற்றறிவால் புதிதொரு விதிசெய்வோம் உணவோ டுடுக்கை இல்லா உயிர்கட்கு எடுத்திறைத்திடும் நல்மனம் நம்முள் விதைத்திடுவோம். செருக்கை செருப்பாய் எண்ணிவிட செருப்பாவோம் தலைமேலதுவும் ஏறிவிட்டால். ஈகையில் இன்முகப் புன்னகை பார்திடுவோர் இறைவனை அவரினில் கண்டு மகிழ்ந்திடவே. உயிரினும் மனிதம் உயர்வென மறவாமல் உயிர் போகும் நிலையொரு உடற்கண்டு உதவிக்கரம் தனை நீட்டாமல் உற்ற பொழுதில் கண்டுங் காணாமல் நமக்கது நிகழ்கையில் உணராமல் மானுடம் வளர மனிதம் மலர்ச்சி அடையட்டும். இருக்கும் வாழ்க்கை இறப்பதற்கே அதில் தேவைக்கதிக மிருப்பது இறைப்பதற்கே வலிகள் வரும் வழி பலவிருந்தும் வாழ்வு நல்வழி ஆவது ஈகையிலே மனித நேயம் என்பதிங்கு மனிதற்கானது மட்டுமல்ல எல்லாமு...
தொட்டில் பிறப்பிலே தாலாட்டு கேட்பது போல். ஊட்டும் உணவும் பாலுமே உடலுயிரை வளர்த்திடும். காளை காணியில் கழுநீர் குடித்து உழைத்திடும். களப்பை தாங்கும் கைகளே, கால் வயிற்று கஞ்சி வார்த்திடும். வித்து தாங்கும் மண்ணே சத்தான உழவின் சொத்தாகும். உழவனின் திறம் எவ்வாறு எந்திரத்துக் கிணையாகும். நடவு, வரப்பு அறுவடைகள் நாமறியவேண்டும். மழைநீரும் காற்றும் ஒளியும் விதையை, வேருடை மரச் செடிகளாக மாற்றும். பிளவு பட்ட உலகில் உழவு திக்கு எட்டும் வாழும். தலைமுறை பல கடந்து யாவையும் இது ஆளும். சேறு கண்ட கைகள் பலருக்கும் சோறு போடும். வாங்கிய கடன் நின்று சில நேரம் இவர் வாழ்வை கொன்று போடும். உலகை காக்கும் உழவால் உடலுயிரை காக்க வேண்டும் தம்பி உழவை காக்க நாமும் உழைத்துப் பார்க்க வேண்டும்.
முற்காலம் அக்காலம் பொற்காலம் எக்காலம் நற்காலம் எதிர்காலம். முற்காலம் முதல் தோன்றிய கற்காலம் அக்காலம் மரப் பட்டையை உடலின் சட்டையாய் மாற்றிய பொற் காலம் இக்காலம் ...
பருவத்தில் விதைத்த ஆசைகள் பயிராகி விளைந்து நிற்கையில் உருவத்தில் உள்ள ஆசையை உருத்தெரியாமல் சிதைத்தவள் காட்சிப் பிழையில் கழிந்த இரவுகளை காதலை சாட்சியாக்கி மாற்றினாள் வாலிபத்து வயசுக் கோளாறுக்கு மருந்தாய் வந்தென்னைத் தேற்றினாள் காத்திருந்த காதல் சுகம் கனிந்தது அவள் வார்த்தையால் ஆனால் ஏக்கம் இன்னும் தொடருது அவளுடன் வாழும் நேரம் எதிர்ப் பார்ப்பதால்
இனிமை இதுவென தெரியாத வரையில் எதுவும் எதுவரையென யாரு மறியாததால். இந்த சுயநல உலகம் செய்யும் பொது நலங்களில் கலகம் மக்கள் மனங்களை மறந்து செயல்படவா கழகம். அனங் கவளழகும் அதை காட் டிடுமவள் திலகம், அவள் கணவனின் உலகம் தாய்மையில் அவள் மனமிளகும். கொடுமைகள் நடக்கும், அவதிகள் பிறக்கும், முடிவுகள் எடுக்கத் தவறிடும் அரசில் , குடிக்குள் பல குழப்பங்கள் வெடிக்கும். விதியினை மதியது வென்றிடுமாம்! விதியது எதுவென தெரியாததுவே, மதியதை மனமது மதியாததால் , இப்படியோரிடர் இருப்பதினாலதை , வென்றிட தானந்த தவவலிமை எண்ணச் செயலை ஒழுங்காக்கும், அதிலெல்லா செயலும் சரியாகும், சரியாய் வாழ்வது யாவருக்கும் , எப்போதும் எங்கும் நலமாகும்
சாதிக்கும் வரை வாழ்பவரும் சாதிக்காய் வாழ்பவரும் சங்கமிக்கும் இச்சமூகத்தில் தலைமுறையின் தலைவிதியை திருத்த எவரும் தேவையில்லை சாதிக்கும் நெறி உண்டு சாதனைக்கும் நெறி உண்டு . நெறி என்னும் பொதுவுடைமை தன்னுடைமையில் பொருத்தி பிறழாமல் வாழ்தலே பேரின்ப மென்றுணர்ந்திடில் சாதனை சரித்திரமாகிடலாம் நடைமுறையில் நல்லொழுக்கம் நாம் கடைபிடித்தே அடையாளம் சாதியெனும் அகந்தையதை மனதில் அடியோடு அழிப்போம் தரமாக வாழ்ந்து சமமான சமூகத்தில் சண்டைகளை தவிர்த்து சாதனைகள் படைப்போம்.
தத்தி வந்து முத்தம் தரும் மொத்த அழகாமே திக்கி வரும் வார்த்தைகளே திகைக்க வைப்பாமே விழி அசைவே காவியத்தை விளிக்கும் மொழியாமே அன்னம் தின்னும் வேளை அதைக்- கன்னம் தின்பதழகாமே சத்தந் தரும் பொம்மைகளே சந்தோசமாமே நித்தம் பல சேட்டைச் செய்யும் பிள்ளையது பெற்றோரின் பெருந்தவமாமே
Comments