அவளன்பழகன்
யாரோ எனை விட்டெரிந்த போது
புதைந்திருந்தேன் விதையாய்
முளைத்தேன் சிறு துளிராய்
நான் வளர காதலெனும் நீர் பாய்ச்சினால்
அன்பிலே.....
ஒரு வித அனுபவம்
அதில் காலம்
கண பொழுதினில் எனை மாற்றும்
உயிரே....
என் மனமது உனை எண்ண
நினைவுகள் வந்தென்ன
நிஜம் தரும் சுகத்திற்கிணை
ஆகுமோ....
கைவிரல் மேலுள்ள
சில மயிர்கள் மட்டும் மெல்ல
அவளை தொட்டுணர்வு கொள்ள
அந்த சுகம் தந்த கணம் மீண்டும் நேருமோ.....
வண்ண பூக்கள் தோட்டம்
வந்தாளவள் பிறை நிலவாட்டம்
மெலிந்த உடலில்
நெளிந்து வந்தாள்
அன்பை பொழிந்து என்னை
அவளன்பழகன் ஆக்கிக்
கொண்டாளே..........
Comments