நாட்டை ஆளும் நாய்களே
நாட்டை ஆளும் நாய்களே - நீங்கள்
வேட்டை ஆடும் கூட்டம் எதற்கு மாட்டை போல உழைப்பவனுக்கு
மாற்றம் கூட மண்ணுக்குள் இருக்கு
சோத்துக்காக உழைப்பவன் சொத்தை
விற்று தின்று பிழைப்பது எதற்கு
கற்றது நன்றெனில் மக்கள் இன்னும்
காலுக்கடியில் கிடப்பது எதற்கு
தொகுதிகள் பலவென பிரித்திடுவார்
நிதியில் பகுதியை கொள்ளை அடித்திடுவார்
மாற்றம் மலரும் என்றிடுவார்
ஏமாற்றத்தை மட்டும் தந்திடுவார்
திட்டம் போட்டு திருடிடுவார்
தான் திருந்திட மட்டும் மறந்திடுவார்
மக்கள் கண்களை இலவச இருளுள் இழுத்திடுவார்
ஓர் நாள் மொத்தமும் அழித்திடுவார்.
Comments
..சாட்டை அடி தம்பி...