காலனை விடவும் காலநிலை

சாலையோரம் கடை போட்டு - கூவுவாங்க
காய்கறிகள எடை போட்டு.

அடுக்கி கெடக்கும் சோத்துதட்டு,
அழகா ஆவி பறக்கும் இட்லி தட்டு.

பலூன், பஞ்சுமிட்டாய், பொம்ம கடைய
சுத்தி வரும் குழந்தைங்க அசட்டு. 

முழம் பத்து வித்துடத்தான்,
ஊரெல்லாம் வலம் வருவான்.

அளவெடுத்து அடுக்கி இருக்கும் - செருப்பாகி 
நடைபோட துணை இருக்கும். 

வளையல், ஊசி பாசி மணி இருக்கும்,
அது வளைச்சு நம்மை போட்டிருக்கும்.

ரகரகமா பிரிச்சு வச்ச,
விதவிதமா துணி இருக்கும்,

இத்தனைக்கும் மேல அந்த - ரோட்டு
கடைக்குனு ஒரு சிறப்பிருக்கும்.

சிரமப்பட்டு சேத்துடுவான் 
அஞ்சு பத்து பாத்துடுவான்

பேரம் பேசும் மக்களுக்கும்
அன்பு ,பாசங் கருணை காட்டிடுவான். 

கடனில் கடைய போட்டுடுவான் - கடங்காரன போல் 
காவல் காரனுக்கும் மாமூல் கொடுத்திடுவான்.

இத்தன தொல்லயும் தாண்டி வந்தா
பெருந்தொல்லை தருதடா 
காலனை விடவும் காலநிலை.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை