நானும் இறைவனே
சொல்ல முடியாததை சொல்லி பார்க்கிறேன்
சொந்தத்தில் தான் சொர்க்கம் உள்ளதென்று.
இழக்க முடியாததை இழந்து பார்க்கிறேன்
நினைவே நீயும் நீங்கிடுயென்று.
பிரிய விரும்பாததால் பிரிந்து பார்க்கிறேன்
பிரியமுள்ள நட்பிடமிருந்து.
வாழ விரும்பாமலே வாழ்ந்து வருகிறேன்
ரசிப்பதற்கும் கோடி நிகழ்வுகள் இருப்பதையுணர்ந்து.
அறிய விரும்பாமல் உணர்ந்து அறிகிறேன்
காமம் கூட காமுகன் மருந்தென.
காதலில்லாமல் பலரையும் காதலிக்கிறேன்
என்துணை அவளாயிருக்க வேண்டுமென.
கடக்க முடியாமல் கடந்து போகிறேன்
கடந்த காலத்தின் எதிர்காலம்
நிகழ்காலம் என்றுணர்ந்தததால்.
ஆசை அனைத்தும் நிறைவேறாதென தெரிந்தும்
ஆசைபடுகிறேன் சிலவேனும் நடந்திடு மென்பதால்.
எழுத தெரியாமல் எழுத தொடங்கினேன்
இவை கவி விடிவாகும் என்று.
பேச தெரியாமல் பேச தொடங்கினேன்
நானும் ஒர் பேச்சாளனின்று.
இருக்கும் இறைவனை காண முடியாததால்
முடிக்கிறேன் இப்படி
இயற்கையும், இறைஉருவும், நானும் இறைவனென்று
ஆண்டவனி(ளி)ன் பிள்ளையாய்.
Comments