Posts

Showing posts from January, 2022

முதுமைக்காதல்

பால் பருகும் குழந்தை  ஈரல் கிழிந்து பல் முளைக்கும் வேளையில் பசியென்று கல்லுண்ணப் போவது போல் எண்ணுதற்கினிய காதல்  எத்தனை அழகோ அத்தனையும் இனிமையே முறையற்ற காதல் அறிவின் முதர்சிக் காதல் முதுமையிலும் துணையாகி இத்தனையிலும் இதுவும் புதுமைக்காதல் விதி முடியும் காலத்திலும்  பதியெனும் கணவனின் கதியாவதில் கொம்பூனி நடக்கையிலும் கை ஊட்டும் சோற்றை உண்பதில். ஓடி உழைத்து வாழ்கையில் அவளை அழைத்து அழகு பார்த்தவன் ஓய்ந்த காலம் வந்த போதும் அவளை அணைக்க ஆறுத லாதலும் முதுமை காதலே இனக்கவர்ச்சி இன்பத்தால் இதயத்தில் இடம் கொடுத்து கனவோடு வாழ்க்கையில் காணாமல் போன காதலும்  முதுமை காதலே.  முதுமையது, வயதில் மட்டுமுள்ளதல்ல, காதலது பெண்கள் மட்டும் சார்ந்ததல்ல வெறியற்ற விருப்பம் காதலாகும் அது முடியும் வரை வாழுமெனில் முதுமைக்காதல் முற்றில் அழகே.

ஒருமைப்பாடு

ஒளியின் உருவம் தெரிந்தால் தான் இருளின் வடிவம் அகன்றோடும் ஒளியும் உயரில் இருந்தால் தான்  பல உயிருக்கு உதவியாகிருக்கும் இருப்பவன் இறைக்க  இல்லான் எடுக்க சிலர் உழைத்து பிழைக்க அதை பலர் உறிஞ்சி குடிக்க கணினியில் ஒருபுறம் வேலை  நிலக் கழனியில் ஒருபுறம் வேலை கனவுகள் சுமந்து சிகரமடைந்திட எதிர்காலம் அவன்வசமாகிடும் நாளை இத்தனை வேறு பாடுகளோடு இன்னும் இங்கு தான் வாழ்கிறோம் விழாக்களாக்கி வரலாற்றை ஒன்றுபட்டே வரவேற்கிறோம் வேற்றுமையில் ஒற்றுமையாம் ஒருமைபாட்டின் நீதி ஒற்றுமை தான் இங்கே அந்த குன்றிலிட்ட ஜோதி

காலத்திலும் காதலிலும்

காலத்திலும் காதலிலும்  பேசாதா வார்த்தையெல்லாம்  காயத்தின் காரணமா? காட்சிக்கு சாட்சியாகியபின் ஊமையாக நடிப்பதுவே தன்னலமா, காதலுக்குள் மௌனங்கள்  மனசாட்சியாக மாறுமம்மா. சுற்றத்தில் குற்றத்தை  சொல்லாதார் நெஞ்சத்து குறுகுறுப்பே கூண்டாகி  சிறைபிடித்து உயிர் குடிக்குமம்மா. விழி உதிர்க்கும் வார்த்தைகளை நா உதிர்க மறுக்கையிலே வழிந்தோடும் சிந்தையினால் வராத வார்த்தைகளே வழிப்போக்கனாகுதம்மா. காலத்திலும் காதலிலும்  பேசாதா வார்த்தைகளே ஆகிடுதே காயத்தின் காரணமாய். 

காலத்தின் பயணத்தில்

காலங்கள் முடிவாகிட காயங்கள் கரைந்தோடுதே ஆசைகள் அலை மோதிட பயணங்கள் புதிதானதே. பாதைகள் பலவாகிட பணமது மனமானதே போதைகள் இங்கிருந்திட  பாதமும் தடுமாறுதே.  ஊணுடலுள் இருந்திடும் உயிர் மட்டுமிங்கு துடித்திட காணுலகில் யாவரும்  உணர்வற்று உயிர் வாழ்வதேன்.  வலிகளும் வந்தடைந்திடும் வழிகளும் இங்கு பிறந்திடும் இனியொரு விதி செய்திட நெறிகளை முறைபடுத்துவோம். மாறுவோம் மாற்றுவோம் மாயையை ஏமாற்றுவோம் ஆற்றலை போற்றுவோம் வெற்றியை பறைசாற்றுவோம்.

பக்கி(பறவை)யாகிடு

வேதனைகள் தாக்கி தாக்கி சோதனைகளை தாங்கி தாங்கி வாழ்விதனில் வாழ வாழ  சாதனைகளை எதிர் நோக்கி  கவலைகளை போக்கி போக்கி  அவமானம் நீக்கி நீக்கி கனவுகளை தேக்கி தேக்கி முயல்வேனெனை நான் செதுக்கி  பயணம் பாக்கி பாக்கி விழுவது வழுக்கி வழுக்கி கை கொடு ஊக்கி ஊக்கி அவர் எழலாம் தலை தூக்கி பேராசையெனும்  கொக்கி கொக்கி முயற்சியை தடை ஆக்கி ஆக்கி  கேடினில் சிக்கி சிக்கி மாண்டு எருவாவாய் மக்கி

விடுதலை பறவை

வள்ளுவனாம் வள்ளல் - வார்த்தை தந்து செல்லும் துள்ளல் அதிகாரம் அறிந்து கொள்ளல் தீமையாகும் பிறரை கொல்லல் . தமிழின் ஓசைக்கும் தமிழ் மேலுள்ள ஆசைக்கும் மீசைக்கு சொந்தக்காரனை அடையாளம் ஆக்கிவிட்டோம்.  தமிழும் தலையெடுத்தது விடுதலைத் தலையெழுத்தும் திருத்தி உயிர்தெழுந்ததை திரும்பிப் பார்க்க வைத்தான். யாருடா பாரதி தமிழ் தேருக்கு சாரதி. மூட நம்பிக்கை தீமிதி முடிவெடுக்கும் முன் தாமதி காற்று வெளியிடை காணம் கேட்கிறது  மாற்றி யோசியென  மனமும் துடிக்கிறது . பரந்த உலகினில்  என்செவி பரவுமிடமெலாம் பறவை மொழியது விளிக்கும் கதையது  பாரதத்தின் சரித்திர சுதந்திரம்