காலத்திலும் காதலிலும்
காலத்திலும்
காதலிலும்
காயத்தின் காரணமா?
காட்சிக்கு சாட்சியாகியபின்
ஊமையாக நடிப்பதுவே தன்னலமா,
காதலுக்குள் மௌனங்கள்
மனசாட்சியாக மாறுமம்மா.
சுற்றத்தில் குற்றத்தை
சொல்லாதார் நெஞ்சத்து குறுகுறுப்பே கூண்டாகி
சிறைபிடித்து உயிர் குடிக்குமம்மா.
விழி உதிர்க்கும் வார்த்தைகளை
நா உதிர்க மறுக்கையிலே
வழிந்தோடும் சிந்தையினால்
வராத வார்த்தைகளே வழிப்போக்கனாகுதம்மா.
காலத்திலும் காதலிலும்
பேசாதா வார்த்தைகளே ஆகிடுதே
காயத்தின் காரணமாய்.
Comments