காலத்தின் பயணத்தில்
காலங்கள் முடிவாகிட
காயங்கள் கரைந்தோடுதே
ஆசைகள் அலை மோதிட
பயணங்கள் புதிதானதே.
பாதைகள் பலவாகிட
பணமது மனமானதே
போதைகள் இங்கிருந்திட
பாதமும் தடுமாறுதே.
ஊணுடலுள் இருந்திடும்
உயிர் மட்டுமிங்கு துடித்திட
காணுலகில் யாவரும்
உணர்வற்று உயிர் வாழ்வதேன்.
வலிகளும் வந்தடைந்திடும்
வழிகளும் இங்கு பிறந்திடும்
இனியொரு விதி செய்திட
நெறிகளை முறைபடுத்துவோம்.
மாறுவோம் மாற்றுவோம்
மாயையை ஏமாற்றுவோம்
ஆற்றலை போற்றுவோம்
வெற்றியை பறைசாற்றுவோம்.
Comments