முதுமைக்காதல்
பால் பருகும் குழந்தை
ஈரல் கிழிந்து பல் முளைக்கும் வேளையில்
பசியென்று கல்லுண்ணப் போவது போல்
எண்ணுதற்கினிய காதல்
எத்தனை அழகோ அத்தனையும் இனிமையே
முறையற்ற காதல்
அறிவின் முதர்சிக் காதல்
முதுமையிலும் துணையாகி
இத்தனையிலும் இதுவும் புதுமைக்காதல்
விதி முடியும் காலத்திலும்
பதியெனும் கணவனின் கதியாவதில்
கொம்பூனி நடக்கையிலும்
கை ஊட்டும் சோற்றை உண்பதில்.
ஓடி உழைத்து வாழ்கையில்
அவளை அழைத்து அழகு பார்த்தவன்
ஓய்ந்த காலம் வந்த போதும்
அவளை அணைக்க ஆறுத லாதலும் முதுமை காதலே
இனக்கவர்ச்சி இன்பத்தால்
இதயத்தில் இடம் கொடுத்து
கனவோடு வாழ்க்கையில்
காணாமல் போன காதலும்
முதுமை காதலே.
முதுமையது, வயதில் மட்டுமுள்ளதல்ல,
காதலது பெண்கள் மட்டும் சார்ந்ததல்ல
வெறியற்ற விருப்பம் காதலாகும்
அது முடியும் வரை வாழுமெனில்
முதுமைக்காதல் முற்றில் அழகே.
Comments