ஒருமைப்பாடு
ஒளியின் உருவம் தெரிந்தால் தான்
இருளின் வடிவம் அகன்றோடும்
ஒளியும் உயரில் இருந்தால் தான்
பல உயிருக்கு உதவியாகிருக்கும்
இருப்பவன் இறைக்க
இல்லான் எடுக்க
சிலர் உழைத்து பிழைக்க
அதை பலர் உறிஞ்சி குடிக்க
கணினியில் ஒருபுறம் வேலை
நிலக் கழனியில் ஒருபுறம் வேலை
கனவுகள் சுமந்து சிகரமடைந்திட
எதிர்காலம் அவன்வசமாகிடும் நாளை
இத்தனை வேறு பாடுகளோடு
இன்னும் இங்கு தான் வாழ்கிறோம்
விழாக்களாக்கி வரலாற்றை
ஒன்றுபட்டே வரவேற்கிறோம்
வேற்றுமையில் ஒற்றுமையாம்
ஒருமைபாட்டின் நீதி
ஒற்றுமை தான் இங்கே
அந்த குன்றிலிட்ட ஜோதி
Comments