பக்கி(பறவை)யாகிடு
வேதனைகள் தாக்கி தாக்கி
சோதனைகளை தாங்கி தாங்கி
வாழ்விதனில் வாழ வாழ
சாதனைகளை எதிர் நோக்கி
கவலைகளை போக்கி போக்கி
அவமானம் நீக்கி நீக்கி
கனவுகளை தேக்கி தேக்கி
முயல்வேனெனை நான் செதுக்கி
பயணம் பாக்கி பாக்கி
விழுவது வழுக்கி வழுக்கி
கை கொடு ஊக்கி ஊக்கி
அவர் எழலாம் தலை தூக்கி
பேராசையெனும் கொக்கி கொக்கி
முயற்சியை தடை ஆக்கி ஆக்கி
கேடினில் சிக்கி சிக்கி
மாண்டு எருவாவாய் மக்கி
Comments