உணர்வுடல்
மனிதனாக பிறந்தது தப்பா
மனிதநேயம் மறந்தது தப்பா
நாடென்பதே வசிப்பிடமப்பா
நாடி வாழ்வை நீ நடத்திடப்பா
நானென்பது உயிரா உடலா
வாழ காரணம் உணவா உறவா
உயர காரணம் உழைப்பா பறிப்பா
தேட காரணம் ஆசையா தேவையா
படிப்பின் பின்புலம் அறிவா பணமா
அழகென்பது நிறமா குணமா
நிழலென்பது இருளா துணையா
தனிமை அது தவிப்பா வரமா
உலகென்பது பொதுவா சுயமா
உயிரென்பது துடிப்பா காற்றா
கடவுள் இங்கு உணர்வா கலையா
இத்தனைக்கும் காரணமாம் உடல்
சுகமும் தசையும் மட்டும் தானோ.
Comments