நட்புக்(குடி) கெட்டது

நட்பு னு சொல்லிக்க நாம ரெண்டு பேருடா
சுத்தி திரிஞ்சே உறவாடுனோம் அது நம்ம ஊருடா
அப்படி இப்படி இருந்த காலம்
நீ இறந்த காலத்தில் கலந்தாச்சுடா

கூட்டா சுத்தி வந்தோம் கூட்டாளி போல
இப்ப நா தேடுறேன் டா உன்ன காணல
நேத்து வாழ்க்கைய நா நெனச்சு பாக்கல


கூப்பிட்ட நேரத்துல என்னால் வர முடியல
அன்னக்கினு பாத்து எனக்கு குடிக்க கூட புடிக்கல

உதவினு கேட்ட போது பொய்யுனு நா நெனசிட்டேன் 
அதனால தானே மச்சான் உன்ன இப்ப தொளச்சிட்டேன்

Glassஅ பாக்குறப்பலாம் உன்னுடைய நியாபகம்
Clauseஆ இருந்த நட்புக்கு செஞ்சிபுட்டேன் பாதகம்
அடிச்ச சரக்கு கூட சீக்கிரமா தெளிஞ்சுடும்
போன உன் உசுர - என் 
மனசு என்னக்கும் நெனச்சிடும்.

Comments

Popular posts from this blog

மனிதம் மலரட்டும்

உழவின் உயர்வு

' முற்காலம், இக்காலம், எக்காலம் நற்காலம் '

இதயம்

மனைவி

ஒழுக்கம்

சாதி...

பிள்ளை